Loading Events

« All Events

  • This event has passed.

A Canadian-Tamil Community Centre: How Can We Get There?

March 24 @ 3:00 PM - 6:00 PM

Free

A Canadian-Tamil Community Centre:
How Can We Get There?
Date: Sunday, March 24th, 2019
Time: 3pm to 6pm
Venue: Kennedy Convention Centre, 1199 Kennedy Road, Scarborough, ON M1P 2L2
Mayor John Tory will be in attendance as the Special Guest

Dear members and organizations in the Tamil community:

As a community in the diaspora, one of our greatest dreams as Tamil Canadians is to build our own community centre.

Various efforts in the past have not been able to reach a successful
outcome due to many different factors.
Learning from the past, we believe that the only way we can succeed in this effort is by bringing
the total strength of our entire community together as a unified force. As many of you are aware,
Mayor John Tory has been a strong supporter of the Tamil community’s effort to build its own
community centre.

Mayor John Tory, during the last term, wholeheartedly supported former Councillor Neethan
Shan’s motion that requested the City of Toronto to engage in conversations with the Tamil
community to explore ways to move forward with the Community Centre initiative.
In order to build on the momentum and to give this initiative a new unified push, we are inviting
all Tamil Canadian organizations, faith groups, media, elected representatives, cultural groups,
sports associations, business leaders, community activists and all related stakeholders, along with
general public. Please consider this as an open invitation to you. Mayor John Tory will be in attendance as the Special Guest. He will deliver his remarks on how the City of Toronto and his office can help to advance this initiative.

Together with his support, we will explore ways in which the community can play an active and
strategic role in moving this initiative forward. This town hall is exploratory in nature. The next
concrete steps will only come from the discussion at the town hall. Therefore, all of your
participation and input is critical to making this process inclusive, participatory and successful.
We are a strong and active community with tremendous success in many different fields. We can
and will have a community centre of our own soon, but to get there, we all need to come together
and work together with the common goal.

Hope you will consider taking part in this first town hall, which will serve as the first step of
many steps we will need to take to reach the destination. If you wish to attend, Please RSVP at
https://coalitionfortamilcommunitycentre.eventbrite.ca or by calling (647) 794-9394.

Sincerely,
Coalition for Tamil Community Centre

கனேடியத் தமிழர்களுக்கான கலாசார நிலையம் !!
கனவுகளை நனவாக்க ஒன்று கூடுவோம்
திகதி : 24 பங்குனி 2019 (March 24th, 2019 )
நேரம் : மாலை 3: 00 மணி முதல் 6: 00 மணி வரை
இடம் : Kennedy Convention Centre, 1199 Kennedy Road, Scarborough, ON M1P 2L2

அனைவருக்கும் அன்பு வணக்கம் !
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் சமூகம் தனக்கான அடையாளங்களை பல வழிகளிலும் இந்த மண்ணில் பதித்து வந்துள்ளது. கல்வி, அரசியல் , வர்த்தகம் தொழில் முனைவுகள், கலை கலாசாரம் என பல தளங்களிலும் தமிழர் நாம் வெற்றியுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும் இந்த மண்ணில் எமது இனத்தின் அடையாளத்தை பேணுவதற்கான ஒரு கலாசார நிலையம் இல்லையே என்கின்ற ஏக்கம் எம்மில் பலருக்கும் உண்டு.

எமது அடுத்த தலைமுறைக்கு எங்கள் பண்பாட்டை
எடுத்துச் செல்வதற்கும் இங்கு வாழும் மாற்றின சமூகங்கள் மத்தியில் தமிழின் பெருமைகளை கொண்டு சேர்ப்பதற்கும் எமக்கான ஒரு கலாசார நிலையம் இன்றியமையாதது.

தமிழர்களுக்கான கலாசார நிலையம் ஒன்றை ஏற்படுத்தவதற்கு பல சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் இதுவரையில் வெற்றி பெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஒரு சமூகமாக நாங்கள் இதற்கான முனைப்பை மேற்கொள்ள தவறியமையே பிரதானமானது என்பதே நாங்கள் கற்றுக் கொண்ட பாடமாகும்.

தற்போது தேசிய அரசாங்கத்திலும் மாகாண அரசாங்கத்திலும் ஆட்சியில் தமிழ் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ள நிலையில் எமக்கான கலாசார நிலையத்தை உருவாக்குவதற்கு தேசிய அரசாங்கத்தினதும் மாகாண அரசாங்கத்தினதும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கான சிறப்பான தருணம் ஒன்று வாய்த்திருக்கின்றது.

கடந்த காலத்தின் தவறுகளில் இருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் ஒட்டுமொத்த தமிழ் சமூகமாக எமக்கான கலாசார நிலையம் ஒன்று உருவாக்கப்பட்ட வேண்டிய தேவையை சகல மட்டங்களுக்கும் எடுத்து செல்வதற்கான ஒரு சந்தர்ப்பம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் ரொரன்ரோ நகரசபையில் முன்னாள் நகரச சபை உறுப்பினர் நீதன் சான் அவர்களால் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களுக்கான கலாசார நிலையம் ஒன்றை உருவாக்கும் யோசனையை நகரபிதா ஜோன் ரோரி அவர்கள் முழுமனதாக ஏற்றுக் கொண்டிருந்தார்.

தமிழ் கலாசார நிலையம் தொடர்பில் கடந்த ஆண்டு தான் வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்தும் பேணி வருகின்ற நகர முதல்வர் அவர்கள் இந்த முன்னெடுப்பிற்கு ரொரன்ரோ நகரசபையினால் வழங்கப்படக் கூடிய ஒத்துழைப்புகள் குறித்து தமிழ் சமூகத்திற்கு தெளிவூட்ட காத்திருக்கின்றார்.

எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் சிறப்பு விருந்தினராக நகர பிதா ஜோன் ரோரி அவர்கள் கலந்து கொண்டு இந்த விடயம் குறித்து தனது கருத்துக்களை தமிழ் சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றார்.
தமிழர் நலன் சார் அமைப்புகள், ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தொழில் முனைவோர், வர்த்தகப் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள், புத்திஜீவகள், ஊடகவியலாளர்கள் என தமிழ் சமூகமாக நாம் ஒன்று திரண்டு எமது எதிர்பார்ப்பினை நகரபிதாவிடமும் கனேடிய அரசசுகளிடமும் முன்வைப்பதற்கான ஒரு முயற்சியினை முன்னெடுத்துள்ளோம்.
எந்த விதமான பேதங்களுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சமூகமாக நாம் எமது குரலினை வெளிப்படுத்துவதற்கான ஒரு தேவை தற்போது தோன்றியுள்ளது.

எமக்கான கலாசார நிலையத்தை உருவாக்குவதற்கான திறந்த உரையாடல்களை மேற்கொள்வதற்கும் அடுத்த நிலைகளை நோக்கி நகர்வதற்குமான ஒரு ஆரம்ப புள்ளியாக இந்த நிகழ்வினை நாம் கருதுகின்றோம். இந்த சந்திப்பின் முடிவில் இந்த திட்டத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் நாம் ஆராய விரும்புகின்றோம்.

காற்றோடு கலந்து கரைந்து போய்விடும் பேச்சுகளாகவோ அல்லது காகிதங்களில் தொலையும் எழுத்துக்களாகவோ இல்லாமல் இனி வரும் நாட்களில் காத்திரமான முன்னெடுப்புகளுக்கான ஒரு தொடக்கமாக இந்த சந்திப்பு அமைய வேண்டும்.

அனைத்து தமிழ் அமைப்புகளும், மக்கள் பிரதிநிதிகளும், சங்கங்கள், கழகங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தக பிரமுககர்கள், கல்வியாளர்கள் என ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்குமான அழைப்பாக இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு உங்கள் அனைவரையும் மிகத் தாழ்மையோடு வேண்டி நிற்கின்றோம்.

கனடாவில் தமிழ் கலாசார நிலையத்தை உருவாக்க வேண்டிய தேவை இங்கு வாழும் ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதால் இந்த அழைப்பு அனைவருக்குமானது .

உங்கள் வருகையினை முன் கூட்டியே எமக்கு அறியத் தருவதன் மூலம் நிகழ்வினை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறும் பணிவோடு வேண்டி நிற்கின்றோம்.
இது ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர் வாருங்கள் எல்லோரும் சேர்ந்தே வடம் பிடிப்போம்..!

நன்றி
தமிழ் கலாசார நிலைய த்திற்கான செயற்குழு

Details

Date:
March 24
Time:
3:00 PM - 6:00 PM
Cost:
Free

Venue

Kennedy Convention Centre
1199 Kennedy Rd
Scarborough, ON M1P 2L2 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!