Loading Events

« All Events

  • This event has passed.

ஊடகவியலாளர் சந்திப்பு- ‘IBC தமிழா

January 12 @ 6:00 PM - 9:00 PM

Free

வணக்கம்!

உலகத் தமிழருக்கோர் உறவுப் பாலமான IBC-தமிழ் ஊடகக் குழுமம் உலகை நோக்கிய தனது நெஞ்சை நிமிர்த்திய பயணத்தின் ஒரு அங்கமாக, கனடா டொரன்டோவில் ஒரு பிரமாண்டமான மேடை நிகழ்ச்சியை 2019ம் ஆண்டின் நடுவில் ஏற்பாடு செய்துள்ளது.

உலகத் தமிழரின் பெருமையின் குறியீடான ‘ IBC தமிழா – டொரன்டோ 2019’ எனும் மகுடத்தில் டொரன்டோவில் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியை 2019ம் ஆண்டின் நடுவில் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகாலவரையில் ஒரு மேடையில் நிகழாத அற்புதமாக 1000 தமிழ் கலைஞர்களை ஒரே மேடையில் ஏற்றி முத்தமிழையும், தமிழின் பெருமையையும், தமிழரின் கலைகளையும் அடுத்த தலைமுறையினரை நோக்கி நகர்த்தும் ஒரு முயற்சியாக ‘ IBC தமிழா – டொரன்டோ 2019’ வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த ‘IBC தமிழா – டொரன்டோ 2019’ நிகழ்ச்சி பற்றிய அறிமுகத்தையும், அந்த நிகழ்ச்சியின் பரிமாணங்கள் பற்றிய கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளுவதற்காகவென்று சிறப்பு ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று எதிர்வரும் 2019.01.12 அன்று Markham Convention Centre இல் மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கின்றது.

செம்மாந்த மொழி பேசும் செருக்கோடு தாங்களும், தங்களது நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகளும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உலகத் தமிழ் கலைஞர்களின் திறமையையும், பெருமையையும் பறைசாற்ற உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தங்களது வருகையை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை> ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற இருக்கின்ற விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளவேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

Details

Date:
January 12
Time:
6:00 PM - 9:00 PM
Cost:
Free

Organizer

IBC TAMIL
Phone:
416-477-2550

Venue

Markham Convention Centre
2901 Markham Road
Toronto, ON M1X0B6 Canada
+ Google Map





If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!

error: Content is protected !!